திருப்பூரில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



பொதுமக்களின் நலனுக்காக தங்களது குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு மன உளைச்சலை தடுக்கும் வகையிலும் காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனும் வகையில், பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும், காவலர்களின் குடும்பத்தினருக்கும் முழு உடல் பரிசோதனை முகாம் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை நல்லூர் சரக காவல் உதவி ஆணையர் நந்தினி துவக்கி வைத்தார்.



தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல் தொடர்பான பிரச்சனைகள், இருதயம் தொடர்பான பிரச்சனைகள் என பரிசோதனைகள் செய்யப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...