தாராபுரத்தில் பட்டதரசி கோவிலில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தாராபுரம் அருகே குப்பிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ பட்டதரசி திருக்கோயில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: கும்பாபிஷேக விழாவில் ஆத்துக்கால்புதூர் , வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே‌ குப்பிச்சிபாளையம் ஸ்ரீ மஹா கணபதி, அருள்மிகு ஸ்ரீ பட்டதரசி அம்மன். ஸ்ரீ கருப்பண்ணசுவாமி, ஸ்ரீ கன்னியாத்தாள் ஆகிய திருக்கோவில்கள் உள்ளன.

100 ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.



விழாவையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தனம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு முதலில் ஸ்ரீ பட்டத்தரசிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி விமானம் உள்ளிட்ட மற்றும் அனைத்து தெய்வங்களில் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது.



இதில் தாராபுரம், ஆத்துக்கால்புதூர் , வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி முருகேஷ், கந்தசாமி வி. முருகன், கே.பி. மனோகரன், தனபால், சரவணன், ஆர். முருகேஷ் ஆகியோர் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...