உடுமலை அதிகாலையில் பேக்கரியில் பயங்கர தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பல்

உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரி ஒன்றில் இன்று அதிகாலையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.



திருப்பூர்: பேக்கரியில் பற்றிய தீயை தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரி ஒன்றில் இன்று அதிகாலையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



முதலில் புகை மூட்டம் அதிக அளவு இருந்த நிலையில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.



சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தீயை ஓரு மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.



இதற்கிடையில் பேக்கரியில் இருந்த எரிவாயு உருளையை பத்திரமாக உடனே அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.



தீ விபத்தில் பேக்கரியில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. முதல் கட்டமாக மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு துறை என தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே அதிகாலையில் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி குடிமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...