வரும் 25ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் - தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

பல்லடத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி மாநில தழுவிய போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர்: சிறு தொழிற்சாலைகள் மின் நுகர்வோர்களுக்கு பீக் ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள குறு தொழில்களில் 12k கீழ் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கேட்டுகொண்டனர்.



சிறு தொழிற்சாலைகள் மின் நுகர்வோர்களுக்கு பீக்ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள குறு தொழில்களில் 12k கீழ் உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேற்கூரை சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மல்டி இயர் டேரிப் உடனடியாக ரத்து செய்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 150 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று பல்லடத்தில் 300க்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பி கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்லடம் தபால் நிலையத்தில் இருந்து ஸ்பீட் போஸ்ட் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களில் 170 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...