கோவையில் அறிவியல் பூங்காவுக்கு நிதி வழங்கியதற்கான கல்வெட்டு திறப்பு - மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, டாடாபாத்‌, அழகப்பா செட்டியார்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவில்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பீட்டிலான உபகரணங்களுக்கு நிதி உதவி வழங்கியதற்கான கல்வெட்டினை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ திறந்து வைத்தார்‌.


கோவை: மாநகராட்சி, ரேடியோ சிட்டி 91.1 ௭..ப்‌.எம்‌ மற்றும்‌ தன்னார்வலர்கள்‌ இணைந்து 7 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ மொத்தம்‌ ரூ.84 ஆயிரம்‌ மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ மாணவ, மாணவியா்கள்‌ பயன்பாட்டிற்கு வழங்கினார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.86க்குட்பட்ட டாடாபாத்‌, அழகப்பா செட்டியார்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவில்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பீட்டிலான உபகரணங்களுக்கு நிதி உதவி வழங்கியதற்கான கல்வெட்டினை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, திறந்து வைத்து, அறிவியல்‌ பூங்காவில்‌ மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம்‌ அளித்து, அவர்களோடு கலந்துரையாடினார்‌.



முன்னதாக, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 86 க்குட்பட்ட கரும்புக்கடை, பூங்கா நகரில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌, கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றவும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறியும்‌ பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுரைகளை வழங்கி,



உக்கடம்‌, புல்லுக்காடு பகுதியில்‌ உள்ள மக்கும்‌ குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தை (Micro Composting Centre) நேரில்‌ சென்று பார்வையிட்டு, செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்து, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தில்‌ Oulife Biotech Solution நிறுவனத்தினர்‌ DCom prO என்ற நுண்ணுயிரி கலவையை கொண்டு மக்கும்‌ குப்பைகளின்‌ மூலம்‌ இயற்கை உரம்‌ தயாரித்து சோதனை ஓட்டமாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அவர்களிடம்‌ இயற்கை உரத்தினை ஒப்படைத்தனர்‌.



அதனைத்தொடர்ந்து, பிரதான அலுவலகக்‌ கூட்ட அரங்கில்‌ மாநகராட்சி, ரேடியோ சிட்டி 91.1 எ.ஃ.ப்‌.எம்‌ மற்றும்‌ தன்னார்வலர்கள்‌ இணைந்து 7 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம்‌ மதிப்புள்ள மொத்தம்‌ ரூ.84 ஆயிரம்‌ மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ மாணவ, மாணவியா்கள்‌ பயன்பாட்டிற்கு வழங்கினார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.47 ரத்தினபுரி, ஜவகர்‌ நகரில்‌ (TURIP 2023-24) தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்‌ 2.8 கி.மீ தொலைவிற்கு ரூ.10.40 இலட்சம்‌ மதிப்பிட்டில்‌ புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

உடன்‌ மாமன்ற உறுப்பினர்‌ பிரபாகரன்‌, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, உதவி பொறியாளர்‌ கணேசன்‌, சுகாதார ஆய்வாளர்‌ சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

இந்த ஆய்வுகளின் போது தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்‌ அஹமதுகபீர்‌, மாநகர கல்வி அலுவலர்‌ முருகேசன்‌, உதவி ஆணையார்கள்‌ மகேஷ்கனகராஜ்‌, ஜே.பிரேம்‌ஆனந்த்‌, செயற்பொறியாளா்‌ கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்‌ கனகராஜ்‌, உதவி நகரமைப்பு அலுவலா்‌ ஜெயலட்சுமி, ஏ.வி.குரூப்ஸ்‌ தலைவர்‌ ஏ.வி.வரதராஜன்‌, பிரோப்பெல்‌ இன்டஸ்டிரீஸ்‌ பி.லிட்‌ இயக்குநர்‌ வித்யா செந்தில்குமார்‌, ராக்‌ ரவீந்திரன்‌, பிரோப்பெல்‌ இன்டஸ்டீரீஸ்‌ விக்னேஷ்‌ மண்டல சுகாதார அலுவலர்கள்‌ ஆண்டியப்பன்‌, குணசேகரன்‌, உதவி பொறியாளர்கள்‌ சுந்தாராஜன்‌, சக்திவேல்‌, கணேசன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ சரவணக்குமார்‌, தனபாலன்‌, ரேடியோ சிட்டி 91.1 எ..ப்‌.எம்‌ நிர்வாகிகள்‌, கோவை தாய்மை அறக்கட்டளை நிறுவனர்‌ சதீஷ்‌, விஷ்ணு, மாநகராட்சி அலுவலர்‌கள்‌, மாணவ, மாணவிகள்‌ மற்றும்‌ தன்னார்வலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...