மருத்துவர்கள், செவிலியர்களுக்கான போதை மீட்பு மற்றும் தாய்சேய் மனநலம் பேணும் பயிற்சி - அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைப்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் மனநலம் பேணுவதற்கான பயிற்சி கையேட்டையும் வெளியிட்டார்.



கோவை: வால்பாறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான போதை மீட்பு மற்றும் தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் தாய் சேய் மனநலம் பெறுவதற்கான பயிற்சி துவக்கி வைக்கப்பட்டு பயிற்சி கையேடு வெளியீட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு தமிழக முழுவதும் உள்ள சுகாதார மருத்துவமனை மற்றும் துணை சுகாதார மருத்துவமனை ஆகியவற்றில் போதை மீட்பு மற்றும் பின் பேறு கால தாய் சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை வால்பாறையில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,



தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. 110 அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. வால்பாறை பகுதியில் 3 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வருகிறது. அறிவிப்பு எண் 61 அறிவிப்பு 62 அறிவிப்பு எண் 63 இந்த நிகழ்ச்சியில் செயல் பாட்டுக்கு வருகிறது.

மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனநலம் பெறுவதற்கு அதற்கான கையேடு வெளியிடுவதும். ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் பின் பேறுகால தாய் சேய் மனநல பேணுவதற்கான பயிற்சியை துவக்கி வைத்தல் பயிற்சி கையேடு ஆகியவற்றிற்கான பயிற்சி கையேடு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

போதை பொருள்கள் கஞ்சா போன்ற தீய வஸ்துக்கள் அளிப்பதற்கு தமிழக அரசு முழு முயற்சி எடுத்து காவல்துறையினர் அளித்து வருகின்றனர். இதனை காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதை பழக்கம் இல்லாத தமிழ் நாடாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதை வலியுறுத்தி இதற்காக சுகாதார துறை மூலம் மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளருக்கும், துணை சுகாதார ஆய்வாளருக்கும், கடைநிலை சுகாதார பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை வால்பாறை பகுதியில் முதல் துவக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

வால்பாறையில் துவங்கப்பட்ட இந்த போதை மிட்பு பயிற்சி 2286 ஆரம்ப சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இந்த பயிற்சியை நேரடியாக போதை பழக்கத்துக்கு 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 22.4 சதவிகிதம் புகையிலை மதுப்பழக்கத்தில் ஆளாகியுள்ளதாக தகவல் வருகிறது.

இந்த பயிற்சியின் மூலம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களை சுகாதார அலுவலகம் மற்றும் துணை சுகாதார அலுவலகம் உள்ள இடங்களில் அலுவலர் பணியாளர்கள் குணப்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



வால்பாறை பகுதியில் ஒன்பது கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்து இன்னும் ஓர் இரு இரண்டு மாதங்களில் பணி நிறைவடைந்து முதலமைச்சர் மருத்துவமனையை திறந்து வைப்பார் என்று கூறிய அவர், மருத்துவமனையில் ஆய்வும் மேற்கொண்டார்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...