ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நிர்வாகிகள் உலோகத் துறை சார்ந்த கருத்தரங்குகள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவரித்தனர். நிறுவனங்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.


Coimbatore: 2027ம் ஆண்டு ஜூன் மாதம் 21 முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் The Bright World Of Metals 2027 சர்வதேச கண்காட்சி நடைபெறவுள்ளது. கடந்த 2023ல் நடைபெற்ற இந்த கண்காட்சி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறுகிறது.




இந்தக் கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை கொடிசியாவில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வின் நிர்வாகிகள் Andre Kilmm, Malte Seilert, Till Schreiter ஆகியோர் கலந்துகொண்டனர்.






இதில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் உலோகத் துறை சம்பந்தமான கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், உலோகத் துறை சார்ந்த கருத்தரங்குகளும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.




துறையின் சவால்களும் தீர்வுகளும்




இந்தத் துறையின் தற்போதைய நிலை, துறை சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று குறிப்பிட்டனர். மேலும் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.




உலக நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால், இந்தத் துறை சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றும், பொருளாதார நடைமுறைகள் பற்றியும் அறிந்துகொள்ளலாம் என்றும் நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.




பொதுமக்களும் கண்காட்சிக்கு வருகை தந்து இந்தத் துறை சார்ந்து பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். இதில் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எளிய வழியில் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வருகை தர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.




பதிவு செய்வது எப்படி?




இந்தக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் பின்வரும் இணையதளங்களில் பதிவு செய்து கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்:




• https://www.gifa.com/gifa online application




• https://www.metec-tradefair.com/metec online application




• https://www.thermprocess-online.com/thermprocess online application




• https://www.newcast.com/newcast online application


Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...