கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் - கோவை எல்லை பகுதியில் இரவு நேரத்திலும் சோதனை தீவிரம்!

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் கேரள எல்லைப் பகுதியான வாளையாறு சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. காலை நேரங்கள் மட்டுமின்றி இரவு நேரத்திலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


கோவை: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் பாதித்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான வாளையாறு சோதனை சாவடியில், இன்று இரண்டாவது நாளாக கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது.

மேலும் பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையானது காலை நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் நடைபெற்று வருகிறது.



இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாகனங்களில் உள்ளவர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சோதனையில் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...