கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை - கோவையில் கோலமிட்டு முதல்வருக்கு மக்கள் நன்றி

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கோவை வெள்ளலூர், செல்வபுரம் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது இல்லங்களின் முன்பு கோலமிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


கோவை: நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடத்தியபோது, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு வந்துள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் மீதமுள்ளவர்களுக்கு இன்று செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகையை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.



கோவை வெள்ளலூர், செல்வபுரம் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது இல்லங்களின் முன்பு கோலமிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...