தாராபுரத்தில் பிளக்ஸ் பேனர் மேடை வைப்பதில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல்

அண்ணா பிறந்தநாளில் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பிளக்ஸ் பேனர் வைப்பதில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் இருதரப்பு அணியினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணா பிறந்தநாளில் யார் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக ஈபிஎஸ் அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சரமாரியாக மோதிக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை இபிஎஸ் அணியினர் மற்றும் ஓபிஎஸ் அணியினர் காலை 10 மணிக்கு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்க திட்டமிட்டு இருந்தனர்.



இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் திருவுருவப்படம் வைப்பதற்கான மேடை அமைக்கும் பணியில் ஓபிஎஸ் அணியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எடப்பாடி அணியினர் à®†à®£à¯à®Ÿà¯ முழுவதும் அண்ணா சிலை அருகே உள்ள இடத்தில் நாங்கள் மேடை போடுவது வழக்கம்.

நாங்கள் மேடை போடும் இடத்தில் நீங்கள் மேடை போடாதீர்கள் என இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் அணியினருடன் சண்டையிட்டனர். அதற்கு ஓபிஎஸ் அணியினர் பொது இடத்தில் யார் வேண்டுமானாலும் மேடை அமைக்கலாம் இதை யாரும் சொந்தம் கொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.



அப்போது இரு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.



இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வந்தனர்.



இரு தரப்பினர் கிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிமுக எடப்பாடி அணியினர் நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுகவை உரிமை கொண்டாடும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது. ஓபிஎஸ் அணியினருக்கு அதிமுக கொடி பெயரை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர்.

அப்போது ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் மோதிக்கொண்டனர். இதனால் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பதட்டமான சூழல் இருந்து வருகிறது.

அதிமுக எடப்பாடி அணியின் தற்போதைய நகர செயலாளர் சி.ஆர். ராஜேந்திரன் மற்றும் ஓபிஎஸ் அணி தாராபுரம் நகரச் செயலாளர் ஜகவர் ஆகியோர் இடத்தில் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...