பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - உடுமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளையொட்டி உடுமலை பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில், உடுமலை நகர செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மாலை மரியாதை செலுத்தபட்டது.



பின்னர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இணை செயலாளர் பனியன் துரை, துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் முத்துசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பூமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிர் அணி செயலாளர் இந்து ராணி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் புவனா, ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, ராஜ்குமார், தென்னரசு, சிவானந்தம், எல்.ஐ.சி.பழனிச்சாமி, வாளவாடி கோபலகிருஷ்ணன், மாக்கினாம்பட்டி சிவக்குமார், பேரூராட்சி செயலாளர்கள் சிவலிங்கம், ஷாஜகான், காதர் உசேன், ஜெயராமலிங்கம், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.என்.வெங்கடேஷ், கொடிங்கியம் ஊராட்சி செயலாளர் முருகானந்தம், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...