மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கவில்லை - பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



கோவை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்காமல் முதல்வர் ஏமாற்றிவிட்டார் என பொள்ளாச்சி ஜெயராமன் புகார் தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,



மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக கூறி|ய முதலமைச்சர் 30 மாத காலம் கழித்து ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்பதைப் போல மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருந்த தமிழக தாய்மார்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார்.

எந்த திட்டத்தை செய்தாலும் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் செயல்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் கொரானா நிவாரணத் தொகை, பொங்கல் சிறப்பு தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் எத்தனை குடும்பத் தலைவிகள் உள்ளார்கள். ஒரு குடும்பத்திலிருந்து திருமணம் ஆகி வேறு வீட்டுக்கு சென்றவர்கள் தனி குடும்பம் தான். இரண்டு பெண்கள் இருந்தாலும் தனித்தனி குடும்பங்கள் தான். மொத்தமாக தமிழக மக்களை ஏமாற்றும் இந்த திட்டத்தால் குடும்பப் பெண்கள் சரியான சவுக்கடி கொடுப்பார்கள்.

இத் திட்டத்தின் மூலம் ஸ்டாலின் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற முறையை கையாளப்பட்டது. திமுக கட்சியிருக்கு மட்டும் பார்த்து பார்த்து வழங்கப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...