பல்லடத்தில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எம்ஜிஆர் சாலையில் நடைபெற்றது.



திருப்பூர்: 1984 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் சிலை மீண்டும் புரனமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எம்ஜிஆர் சாலையில் நடைபெற்றது.



1984 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் சிலை மீண்டும் புரனமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் யு.எஸ்.பழனிச்சாமி, மற்றும் அதிமுக மகளிர் அணி, இளைஞரணி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,



திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் செய்த பணிகளை தான் திரும்ப செய்து கொண்டிருக்கிறார்கள். புதிதாக எந்த திட்டங்களும் திருப்பூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. இந்த இரண்டரை வருட காலத்தில் திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மீதமுள்ள இரண்டரை ஆண்டு காலத்திலும் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...