தாராபுரம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்த சோகம்!

தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியில் வசிக்கும் ஹக்கீம் மற்றும் ஆதிதா தம்பதிக்கு சொந்தமான 20 ஆடுகள் கட்டப்பட்டிருந்த பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்த நிலையில் 2 ஆடுகள் படுகாயமடைந்துள்ளன.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.காளிபாளையம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி கடிப்பதும் தெருவில் செல்லும் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை கடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், காளிபாளையத்தை சேர்ந்த ஹக்கீம் என்பவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆதிதா, 20 ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை செய்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலையில் ஆடுகளை காட்டில் மேய்த்த பின்பு இரவு வீட்டிற்கு அருகில் உள்ள பட்டியில் 20 ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனர். இரவு ஒரு மணிக்கு ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹக்கீம் உடனடியாக பட்டியை சென்று பார்த்த போது அங்கு 10க்கும் மேற்பட்ட நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொண்டிருந்தன.



நாய்களை விரட்டியடித்த பின்னர், ஆடுகளை பார்த்த போது நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் இறந்து கிடந்துள்ளன. மேலும் இரண்டு ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து ஆதிதா கூறுகையில், தாராபுரம் குறிப்பாக கொளத்துப்பாளையம் வட்டார பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை பெரும்பாலும் ஆடுகளை குறி வைத்து இரவு நேரங்களில் பட்டியில் புகுந்து வேட்டையாடுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஆடுகளை நம்பி பிழைப்பு நடத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடிக்கவோ அல்லது சுட்டு தள்ளவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...