கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மீண்டும் பாம்பு - ஊழியர்கள் அச்சம்!

கோவை ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் அரசு கருவூல கட்டிடம் மற்றும் தேநீர் கடையின் அருகே புதர் மண்டி கிடப்பதால், அடிக்கடி பாம்பு தென்பட்டு வரும் சூழலில் அப்பகுதியில் பாம்பு ஒன்று அனைவரையும் பார்த்து சீறியதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.



கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் அரசு கருவூலம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே தேநீர் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய கட்டிடத்தின் அருகில் புதர் மண்டி கிடப்பதால் அடிக்கடி பாம்புகள் தென்படுவது தொடர் கதையாகி வருகிறது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேநீர் கடை, கருவூலம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்புகள் படையெடுப்பதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பும் கூட இந்த தேனீர் கடையில் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில் நேற்றும் கருவூலத்துக்கு அருகே சிறிய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதனை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த பாம்பு தலையை தூக்கி சீறியதால் அச்சம் அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.



அதற்குள் அந்த தேநீர் கடையில் வேலை செய்து வரும் வாலிபர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு லாவகமாக அந்த சிறிய பாம்பை பிடித்தார்.



இதனை தொடர்ந்து மீட்பு படையினரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.



கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் அடிக்கடி பாம்புகள் உலாவி வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் புதர் மண்டி உள்ள இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் கருவூலத்தை இடமாற்ற வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...