பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - வால்பாறை திமுக நகர கழகம் சார்பில் மரியாதை

வால்பாறை திமுக நகர கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: திமுக நகர கழக செயலாளர் ஆ.சுதாகர் தலைமையில் கொண்டாடப்பட்ட அண்ணா பிறந்தநாள் விழாவில்,கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவில் 115ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வால்பாறை திமுக நகர கழகத்தின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நகர கழக செயலாளர் ஆ.சுதாகர் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தநிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், சார்புஅணி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...