அரசு நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு வேண்டுமென்றே நிராகரிப்பதாக பல்லடம் ஒன்றிய குழு தலைவர் மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!

பல்லடம் ஒன்றிய குழு தலைவரான தேன்மொழி தன்னை வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகத்தினர் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அழைக்காமல் நிராகரிப்பதாகவும், இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.



திருப்பூர்: அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு வேண்டுமென்றே தன்னை நிராகரிப்பதாக, திமுகவை சேர்ந்த பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மாவட்ட நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் தி.மு.க.,வை சேர்ந்த தேன்மொழி.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,



கடந்த சில காலங்களாக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் எதற்குமே என்னை அழைப்பதில்லை. நான் பெண் என்பது காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தெரியவில்லை.

சமீபத்தில் அமைச்சர் கயல்விழி கூட இதே போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். இன்று நடந்த மகளிர் உரிமை திட்ட துவக்க விழாவுக்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சி என்பதுடன், ஒன்றிய குழு தலைவராக உள்ள எனக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு கொடுக்காதது வேதனை அளிக்கிறது.

இது தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் ஆகியவரிடம் கேட்டதற்கு பதில் கூறாமல் சென்று விட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் இருந்தும் சரியான பதில் இல்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில், அமைச்சர் சுவாமிநாதனும் இது குறித்து கண்டு கொள்வதில்லை. இது தொடர்பாக, திமுக., தலைமைக்கு புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக, கலெக்டர், நேர்முக உதவியாளர் மற்றும் திட்ட இயக்குநர் ஆகியோரை, தேன்மொழி மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால், மூவருமே அவரது அழைப்பை ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...