கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் திடீர் தீ விபத்து - ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டை பகுதியில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.


கோவை: கருமத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (62). இவர் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் விசைத்தறி கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மாலை சுமார் 6:30 மணி அளவில் விசைத்தறி கூடத்தின் மேல் பகுதியில் திடீரென மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த விசைத்தறி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இதனையடுத்து, அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சூலூர் தீயணைப்பு நிலைய அதி காரி வேலுச்சாமி தலை மையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 நவீன விசைத்தறி கூடங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த நூல் பண்டல்கள் உள்பட ஒரு கோடி மதிப்புள்ளான பொருட்களும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. இதுகுறித்து விசைத்தறி கூட மேலாளர் லோகநாதன் கூறியதாவது, தொழிலாளர்கள் வழக்கமாக பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தொழிலாளர்களை வெளியேறி தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைத்தறி மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளது. இந்த தீவிபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறி கூடங்கள், நூல் மில்கள், தொழில்கூடங்கள் அதிகளவில் உள்ளன. எனவே இந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

சூலூர், அவிநாசி மற்றும் கோவை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள், பஞ்சு நூல்கள் முற்றிலும் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைகின்றன.

கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...