மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் மனித வன உயிரின மோதல் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மனித வன உயிரின மோதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


கோவை: நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கிளி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விலங்கினங்களை வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தேக்கம் பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மனித வன உயிரின மோதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்முகாமில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது, கிளி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விலங்கினங்களை வளர்ப்பது உள்ளிட்டவை சட்டப்படி குற்றம். வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடமோ, காவல்துறையினரிடமோ, பஞ்சாயத்து தலைவரிடமோ ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாடு மின் வேலிகள் விதியின் படி பழைய மின்வேலிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய மின்வேலிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும். துப்பாக்கி, நாட்டுவெடி, அவுட்டுக்காய், சுருக்கு கம்பி வலை போன்றவற்றை பயன்படுத்தி வனப்பகுதியில் முயல், பன்றி, மான் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவது கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் வனத்துறையினர் அல்லது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கழிவுப் பொருட்களையோ, கழிவுகளையும் கொட்ட கூடாது.

இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து மனித - வன உயிரின மோதல் உருவாகும் சூழல் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இடையே கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய விவசாயிகள், வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாத வண்ணம் அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். அதற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். மின்வேலிகளை சீர மைக்க வேண்டும். மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட்டால் ஏற்படும் இழப்புகளுக்கு தற்போது அரசால் வழங்கப்படும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை.

எனவே நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாத வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வனத்துறையினர், பொது மக்கள், விவசாயிகள், வன ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...