சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்ட தலைமை ஆசிரியர் - பள்ளி முன்பு இந்து முன்னணியினர் குவிந்ததால் பரபரப்பு!

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.



திருப்பூர்: சாமுண்டிபுரம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் சனாதனத்தை வெரறுப்போம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை கண்டித்து பள்ளி முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதானத்தை வேரறுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வடக்கு காவல் நிலைய போலீசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்ற மாநகராட்சி திமுக மேயர், தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எதற்காக இங்கு கூட்டம் என்று கேள்வி எழுப்பி சிறிது நேரம் அங்கு நின்று விட்டு அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.



பள்ளியை முற்றுகையிடுவதற்காக வந்திருந்த 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...