கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்தபோது காப்பாற்றிய பாதுகாப்பு தலைமை காவலர்

கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி ஒருவர் தவறி விழுந்தார். அப்பாது பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் துரிதமாக செயல்பட்டு அந்தப்பெண்ணை பத்திரமாக மீட்டார்.



கோவை: ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தலைமை காவலருக்கு, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கோவையில் ரயில் நிலையத்தில் நேற்று கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில் புறப்பட்டது. அப்போது அவசரவசமாக வந்து ரயிலில் இரு பெண்கள் ஏற முயன்றனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தார். ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில் தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து காப்பாற்றினார்.



இந்த காட்சிகள் அனைத்தும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் ரயிலில் இரு பெண்கள் ஏற முயற்சிப்பதும், ஒரு பெண் ஏறிய நிலையில் மற்றொரு பெண் ஏறும்போது ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுவதும், அவரை தலைமை காவலர் காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...