உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் மனைவி நினைவு நாள் - 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாளின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



திருப்பூர்: மனைவியின் நினைவுநாளில் 400க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் சுமார் 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை பாலக்காடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் ஷாபி பரம்பிள் தலைமையில் வழங்கபட்டது.



உடுமலை நகர கூட்டுறவு பண்டக சாலை செயலாளர் துரைராஜ், ஊழியர் லதா, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மீரான், கிருஷ்ணன், பழனிச்சாமி,ஆறுமுகம், ஷேக் அப்துல்காதர் ,தங்கராஜ், முனுசாமி, கவுருராஜ்,சாகுல் அமீது மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி முத்துக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...