கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில் நகை, பணம் பறிமுதல் - பாரத ஸ்டேட் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைப்பு

கோவை கட்டுமான நிறுவனத்தில் வடவள்ளி, சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனி இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.



கோவை: மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை வங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கோவை கட்டுமான நிறுவனத்தில் வடவள்ளி சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனி இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது அதில் சோதனையின் போது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் தங்க நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஏழு அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் ஒப்படைத்தனர். இதில் எவ்வளவு பணம் நகை உள்ளது என்பது இதுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிப்படுத்த வில்லை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...