திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் இல்லத் திருமண விழா - அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவை: கோவை வந்த அமைச்சர் உதயநிதிக்கு மேளதாளம் முழங்க பாரம்பரிய விளையாட்டுகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இல்லத்திருமண வரவேற்பு விழா, தொண்டாமுத்தூரில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

அவரை, விமான நிலையத்தில், அமைச்சர்கள் சு.முத்துச்சாமி, சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தனபால் தலைமையில் மேளதாளம் முழங்க, இளைஞரணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



மேலும் மகளிர் அணி சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு வரவேற்பாக நடனம் ஆடியும், பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், சுருள் வீச்சுடனும் சாலையோரங்களில் திமுக கட்சி கொடிகளை காண்பித்தும், வரவேற்பு பதாகைகளை ஏந்தியபடியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி திருமண மண்டபம் அருகே கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் தலைமையேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...