பேரனின் காதணி விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை - கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழாவில் நடிகர் ரஜினகாந்த் பங்கேற்றார்.



கோவை: பேரனின் காதணி விழாவில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கோவை விமானம் நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது. விசாகனின்குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் விசாகனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கின்றனர். இதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்தடைந்தார். அவருக்கு ரஜினி ரசிகர் மன்றத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.



பின்னர் ரசிகர்களுக்கு கையசைத்தவாறு அவர் காரில் புறப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...