கோவையில் சுந்தரலிங்கேஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா - சுற்று வட்டாரப்பகுதியினர் பங்கேற்பு

கோவை துடியலூரை அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் புதியதாக ஒரே கருவறையில் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் சுவாமி அம்மாள் எழுந்தருளியும், அகத்தியர் லோகமாதா மற்றும் சப்தமாதாக்கள், ஆஞ்சிநேயர் உள்ளிட்ட தெய்வ விக்ரகங்கள் அமைக்கப்பட்டன.



கோவை: சுந்தரலிங்கேஸ்வரர் சுவாமி அம்மாள் கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அன்னதானம் பெற்றுக்கொண்டனர்.

கோவை துடியலூரை அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் புதியதாக ஒரே கருவறையில் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் சுவாமி அம்மாள் எழுந்தருளியும், மகா கணபதி, செந்தில் ஆண்டவர், அருள்மிக் வராஹி அம்மன் தனி சன்னதிகளாகவும், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மன், நவநாயகர், காலபைரவர், நால்வர் பெருமக்கள், அகத்தியர் லோகமாதா மற்றும் சப்தமாதாக்கள், ஆஞ்சிநேயர் உள்ளிட்ட தெய்வ விக்ரகங்கள் அமைக்கப்பட்டன.

அதன்பிறகு கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 14ஆம் தேதி மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை, மஞ்சள் பிள்ளையார் வழிபாடு உடன் தொடங்கிய இந்த விழாவில் வெள்ளிக்கிழமை காலை மூத்த பிள்ளையார் வேள்வி, பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்து 108 தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர் பொதுமக்கள் சார்பாக எடுத்து வருதல், அன்று மாலை முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி பூஜைகள், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றன.



இன்று காலை நான்காம் கால வேள்வி பூஜை உடன் தொடங்கிய விழாவில் காலை 10 மணியளவில் யாக சாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிவத்திரு.பெ.சிவகுமார் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும், அதனைத் தொடர்ந்து அருள்தரும் சுந்தரவல்லி உடன்மர் சுந்தரலிங்கேஸ்வரர் அவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டும், அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.



தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர் நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி, ராக்கிபாளையம், வடமதுரை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...