கோவையில் ரஜினியை பார்த்து வைஃபான ரசிகர்கள் - ஏமாற்றாமல் காரின் டாஃப்பை திறந்து வெளியே வந்த்தால் ஆரவாரம்

சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் சௌந்தர்யா குழந்தைக்கு இன்று முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்தை பார்த்து ரசிகர்கள் வைப்பாகினர்.



கோவை: நட்சத்திர விடுதியில் இருந்து காரில் வெளியே வந்த ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் தலைவர் தரிசனம், தலைவர் நிரந்தரம் என்பது போல வைபாகி அவரது காரை துரத்திச் சென்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவும் கோவை சூலூரை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் குலதெய்வ கோவிலான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இன்று குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கோவை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் குழந்தை வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியின் முதலாவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் சென்னை செல்வதற்காக நட்சத்திர விடுதியில் இருந்து சிட்ரா விமான நிலையத்திற்கு சென்றார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் விடுதியில் தங்கியிருந்ததை அறிந்த அவரது ரசிகர்கள், அங்கு குவிந்தனர்.



ரஜினியின் கார் விடுதியில் இருந்து வெளியே வந்த போது, வாயிலில் மணிக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.



ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் காரின் டாஃப்பை திறந்து வெளியே வந்து கையசைத்தவாறு சென்றார். ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் தலைவர் தரிசனம், தலைவர் நிரந்தரம் என்பது போல வைபாகி அவரது காரை துரத்திச் சென்றனர்.

அப்போது அவிநாசி சாலையில் பேருந்தில் செல்பவர்களும் ரஜினியை கண்டு ஆரவாரம் செய்தனர். நடிகர் ரஜினி காரிலிருந்து வெளியே வந்து சென்ற காட்சிகளை படம் பிடித்த ரசிகர்கள், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...