தந்தை பெரியார் பிறந்த நாள் - கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாட்டுக்கறி விருந்து

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை: தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.



தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரிய அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் படம் மற்றும் சிலைகளுக்கு பெரியாரிய அமைப்பினர், ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள் அரசியல் கட்சியினர் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் இந்நாளில் சனாதனத்தை மறுப்போம் சமத்துவத்தை ஏற்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...