சித்தா படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் - நடிகர் சித்தார்த் விளக்கம்

சித்தா திரைப்படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றும், இந்த படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்றும் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.


கோவை: சித்தா திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றுபழனி முருகனை படக்குழுவினருடன் தரிசிக்க செல்வதாக நடிகர் சித்தார்த் கூறினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சித்தார்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் "சித்தா". இந்த திரைப்படம் விரைவில் திரையில் வரவிருக்கும் நிலையில் படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினர் வேண்டி பழனிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் இன்று கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சித்தா திரைப்படம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என நம்பிக்கை இருக்கிறது.

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படம் சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தை இருவருக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.

இந்த படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்த படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும். பழனியில் மூன்று மாதமாக படப்பிடிப்பு நடந்த நிலையில், சித்தா படம் வெற்றி பெற பழனி முருகனை படக்குழுவினருடன் தரிசிக்க செல்வதாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...