பெரியாரின் பிறந்தநாள் - கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


கோவை: கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது புகைபடம் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் பெரியாரின் ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள், அரசியல் கட்சியினர் பெரியாரின் படங்களுக்கும் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பிலும் இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.



இந்நிலையில் கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.



சமூக நீதி நாளை கொண்டாடும் வண்ணம் நடைபெற்ற இந்த கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



சிவானந்த காலனியில் துவங்கிய இந்த பேரணி கிராஸ் கட் ரோடு, காந்திபுரம் பேருந்து நிலையம் வழியாக பெரியார் படிப்பகத்தில் முடிவடைந்தது.



இந்தப் பேரணியில் சமூக நீதியை குறித்தான முழக்கங்கள் எழுப்பட்டன.



மேலும் பேரணி முழுவதும் நிமிர் குழுவினரின் பறை இசை இடம்பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...