தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் அமைச்சர் சாமிநாதன் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திரளாக நிர்வாகிகள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், நகர் மன்ற செயலாளர் பொறியாளர் முருகானந்தம், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தனசேகர், குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா, திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...