உடுமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினியின் ஜெயிலர் விநாயகர் செய்து ரசிகர் அசத்தல்!

உடுமலை அடுத்த பூளவாடி பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞரும், நடிகர் ரஜினியின் ரசிகருமான ரஜினி ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்திய மண்பாண்ட கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஜினி ரஞ்சித். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரஜினியின் திரைப்படம் வரும்போது எல்லாம் அவரின் திருஉருவ சிலைகள் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் களிமண்ணால் உருவான ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கிய நிலையில் பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...