NIA சோதனை குறித்து பரவும் தவறான வதந்திகள் - கோவையில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரிடம் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக, தவறான உள்நோக்கம் கொண்ட வதந்திகள் பரவி வருவதை கண்டித்து கோவையில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: என்.ஐ.ஏ சோதனை குறித்த தவறான வதந்திகள் பரவி வருவதை கண்டித்து கோவையில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் கடந்த வருடம் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக 13 நபர்களை ஏற்கனவே காவல் துறை கைது செய்து உள்ளது. தற்போது அவர்களுடன் தொடர்பில் இருக்க கூடியவர்களா என்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் வீடுகளில் நேற்றைய தினம் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனை நடத்தியது.

இந்த சோதனை சம்பந்தமாக பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகள் அரபி கல்லூரிகளில் தீவிரவாத செயல்கள் என்ற தலைப்பில் தவறாக திரித்து பரப்பி வருகின்றனர்.

மதரசாவில் குர்ஆன் கற்கும் மாணவர்களுக்கு ISIS அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தி பொய் செய்திகள் மக்கள் மத்தியில் பரப்பி பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியில் NIA இறங்கி உள்ளது.

உண்மையில் என்ன நடந்தது என்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இணையவழியில் திருக்குர்ஆன் வகுப்பு நடைபெற்ற போது அந்த வகுப்பில் இணைய வழியில் 60 நபர்கள் பதிவு செய்து அரபியை கற்றுக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகுப்பில் ஒருவராக கோவை கோட்டைமேடு சம்பவத்தில் ஈடுபட்ட மறைந்த ஜமேசா முபின் இருந்ததாக தகவல் வருகிறது. ஆகவே, அந்த வகுப்பு யாரெல்லாம் அரபி கற்றார்களோ, இணைய வழி குர்ஆன் வகுப்பில் கடந்த வருடங்களில் பயின்றவர்களிடம் விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், மறைந்த ஜமேசா முபின் சம்பந்தமாக ஏதேனும் தகவல் அறியப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு ஒன்றும் இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை(NIA) தெரிவித்து சோதனையை நிறைவு செய்து சென்றுள்ளது.

ஆனால் கோவையில் தேசிய புலனாய்வு முகைமை (NIA) அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் சோதனை செய்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும் தவறான செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.



ஆகவே, இது போன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்ற தொனியில் சித்தரிக்கும் தேசிய புலனாய்வு முகமை NIAவை கண்டித்தும், தேசிய புலனாய்வு முகமை NIA மூலம் இஸ்லாமியர்களை குறிவைத்து வேட்டையாடும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை மாநில செயலாளர் குனிசை அமீது, மமக மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக், தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.



தமுமுக மாநில பிரதிநிதி சாதிக் அலி, SMI மாநில செயலாளர் அம்ஜத் அலிகான், தொண்டரணி துணை செயலாளர் சக்கீர், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் MC, பொள்ளாச்சி கபூர், சித்திக், திருப்பூர் நசிருதீன், அபுசாலி துணை தலைவர் நூருதீன், துணைச் செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரஹ்மான், சிக்கந்தர், SSஅபு, கேபிள் ரபீக், பயாஸ் கான், அணி நிர்வாகிகள் ரசீதா பேகம், அசாருதீன், சதாம் உசேன், ஜியாவுல் ஹக், ஜுபைர், MTS அசாருதீன்,அபுதாஹிர், சித்திக், இக்பால், ஜான்ஷா, மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...