விஸ்வகர்மா ஜெயந்தி விழா - பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலம்!

விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனையில் பிறந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.


கோவை: தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா,மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவானதுதேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 25க்கும் மேற்ப்பட்ட ஏழை கூலித் தொழிலாளர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட தலைவர் T.K.ராஜேந்திர பிரசாத் தலைமையிலும், மாநிலத் துணை தலைவர் J.புவனேஷ்வரன் முன்னிலையிலும் மாநிலத் தலைவர் C.பாண்டித்துரை ஆசியுடன் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பம் பங்கேற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியும், அமைப்பு சாராதொழிலாளர்கள் விழிப்புணர்வு மாபெரும் பொதுக்கூட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்றது.



இதில் 5 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் மிஷன், 2. ஆண்களுக்கு அயர்ன் பாக்ஸ், மேலும் 150க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 20 நபர்களுக்கு சீருடை, கட்டிட தொழிலாளர்கள் 35 நபர்களுக்குதொழில் உபகரணங்கள், ஆசாரி தொழிலில் ஈடுபட்டு வரும் 150 நபர்களுக்குதேவையானஉபகரணங்கள் வழங்கப்பட்டன.



இதில் பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...