தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரனை

தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்பொழுது மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாடார் தெரு பகுதியைச் சேர்ந்த வெற்றி வேந்தன்- புனிதா தம்பதியினர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவேந்தன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வெற்றிவேந்தனின் மூத்த மகள் ரித்திகா (18) காங்கயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் (பி.காம் சி.ஏ) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரித்திகாவின் தாய் புனிதா இன்று காலை வழக்கம் போல் காலை 10 மணிக்கு சென்று விட்டு மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது மகள் ரித்திகா அறை உள்பக்கம் தாழிட்டிருந்தது நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்த்தது. இதனால் சந்தேகம் அடைந்து அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது ரிருத்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரித்திகாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



அங்கு ரித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரித்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...