அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம்

தாராபுரத்தில் அமமுக சார்பில் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மாவட்ட அமமுக செயலாளர் கே.பி. நல்லசாமி கலந்துகொண்டார்.



திருப்பூர்: அ.தி.மு.க ஆட்சியில் டாஸ்மார்க் கடையில் ஒரு கோட்டருக்கு 5 ரூபாய் அதிகமாக வசூல் செய்தார் தங்கமணி. இன்றைய தி.மு.க. ஆட்சியில் ஒரு கோட்டருக்கு 10 ரூபாய் வசூல் செய்கின்றனர் என திண்டுக்கல் மாவட்ட அமமுக செயலாளர் கே.பி. நல்லசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமமுக சார்பில் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அண்ணாசிலை அருகே நடைபெற்றது.



திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தாராபுரம் நகர கழகம், சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில். முன்னாள் அமைச்சரும் அமமுக துணைச் செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான சி. சண்முகவேலு தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பி. நல்லசாமி, அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் எம். ஆர்.ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் மாவட்ட அமமுக செயலாளர் கே.பி. நல்லசாமி, அதிமுக முன்னாள் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் அன்றைய முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அமைச்சர் பதவியை பறித்தார்.

அதன் பிறகு சின்னம்மா சசிகலாவின், உதவியால் கல்வித்துறை அமைச்சர் பதவியைப் பெற்றார். ஆனால் அவருக்கும் துரோகம் செய்தவர் செங்கோட்டையன். முன்னாள் அதிமுக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலையில் 50 வீடுகளுக்கு கேபிள் டிவி கனெக்சன் கொடுத்து அதன் மூலம் வருமானம் பெற்று வாழ்க்கையை நடத்தி வந்த தெரு நாய் உடுமலை ராதாகிருஷ்ணன்.



அப்படிப்பட்ட நபருக்கு கேபிள் டிவி வாரிய பதவி கொடுத்து அதன் பிறகு கால்நடைத்துறை அமைச்சர் பதவி கொடுத்ததற்கு நன்றி கெட்டவர்களாக மாறி திருப்பூர் மாவட்டத்தில் பல கோடிகளை சம்பாதித்து இன்று பதவியில் அமர வைத்த சின்னமா சசிகலாவிற்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் துரோகம் செய்தார். இவர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் பதவிக்காக தூக்கி விட்டவர்களுக்கே துரோகம் செய்தவர் உடுமலை இராதாகிருஷ்ணன்.

வேலுமணி ஆகியோர். எப்படிப்பட்டவர் என்பது பொதுமக்களுக்கு தெரியும். வேலுமணி, ஒரு கேர்அ‌ஃப் பிளாட்பார்ம் ஊர் ஊராக சுற்றி தெரிந்தவர். தான் நாடகம் நடத்துவதாகவும் தெருக்கூத்து போடுவதாகவும் கேட்டுக் கொண்டு வந்தவர் வேலுமணி. இது போன்ற அயோக்கியர்களை எல்லாம் அமைச்சராக்கி பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர்கள் ஆக்கியதன் விளைவாக இப்போது எந்த சூழலில் உள்ளார்கள் என்பது பொதுமக்கள் ஆகிய உங்களுக்கு தெரியும்.

இது போன்ற அயோக்கியர்களை எல்லாம் விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் டி.டி.வி.தினகரன் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

பொதுமக்களுக்கு தெரியும். இது போன்ற அயோக்கியர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் கூடாரங்களிலிருந்து கொலைகாரர்களிடமிருந்து அவர்களின் கைகளில் மாட்டிக் கொண்டுள்ள இரட்டை இலை சின்னத்தையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து ஐந்து ஆண்டு காலம் பயணித்துக் கொண்டுள்ளோம்.

நிச்சயமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் தமிழகத்திலே எங்கு பார்த்தாலும் சொல்லுகிறார்கள். தற்போது தீய சக்தி கருணாநிதியின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக இந்த தி.மு.க. ஆட்சிக்கும் கடந்த நான்கு ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என பொதுமக்கள் சொல்லுகின்றனர்.

கொள்ளையடிப்பதில் எடப்பாடி பழனிச்சாமி என்றால் அதைவிட கைதேர்ந்தவர்கள் திமுகவினர். தண்டக்காரன் முதல் கண்டக்டர் வரை உள்ள அரசு பதவிகளுக்கு அன்று ரூ. 10 லட்சம் வாங்கினார்கள். தற்போது தி.மு.க. ஆட்சியில் 20 லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் .

அன்று அ.தி.மு.க ஆட்சியில் டாஸ்மார்க் கடையில் ஒரு கோட்டருக்கு 5 ரூபாய் அதிகமாக வசூல் செய்தார் தங்கமணி. இன்றைய தி.மு.க. ஆட்சியில் ஒரு கோட்டருக்கு 10 ரூபாய் வசூல் செய்கின்றனர். இதனால்தான் எடப்பாடி ஆட்சிக்கும் தி.மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போலவும் புரட்சி தலைவி ஜெயலலிதா போலவும் ஏழைகளைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் தொழிலாளர்களை பற்றியும் வர்த்தக பெருமக்களை பற்றியும் சிந்திக்க கூடிய ஒரு தலைவன் இருக்கின்றார் என்றால் அது டி.டி.வி. தினகரன் மட்டுமே. இதனை தமிழ்நாடு மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என அவர் பேசினார். 

அதனைத்தொடர்ந்து, அமமுக துணைப் பொதுச் செயலாளர் சி. சண்முகவேலு, பேசியாதவது. 

தமிழகத்தை ஆள தகுதியான சிரித்த முகத்தோடு மக்களின் நிலைப்பாட்டை உணர்ந்து பணியாற்றக்கூடிய ஒரு தலைவர் யார் என்றால் அது டி.டி.வி. தினகரன் தான். அவர் உடனே முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். டி.டி.வி. தினகரனை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். குக்கர் சின்னத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அது வாக்குகளாக கிடைக்கவில்லை. 

ஆனால் வெகு சில காலங்களில் வாக்குகளாக மாற வாய்ப்பு உள்ளது. தற்போது ஆளும் தி.மு.க. ஆட்சியிலும், ஆண்ட எடப்பாடி à®….தி.மு.க ஆட்சியிலும் கமிஷன் பெறுவதிலேயே குறிக்கோளாக உள்ளனர். எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 7 லட்சம் கோடி கடன் உள்ளது. 

கடந்த அம்மா ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டது பெண்களுக்கு உயர்வான திட்டமான தாலிக்கு தங்கம் திட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டது. 

பல்வேறு வரிகளை தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது. அதில் வீட்டு வரி பால் விலை உயர்வு மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விதத்தில் உயர்த்தி உள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு அதற்கு முன்னதாகவே எவ்வாறு மக்களிடம் வரி மூலம் வருவாய் ஈட்டி அதனை பொதுமக்களுக்கு கொடுக்கலாம் என திட்டம் தீட்டி அடித்தட்டு மக்கள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த தி.மு.க. அரசு என அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...