தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு 13 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 43 பேர் சவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அனைத்து சவர்மாக்கடைகளையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லலிதாம்பிகை முறையாக ஆய்வு செய்து கெட்டுப்போன (இறைச்சிகளை) பழைய சாரமாக்களை விற்பனை செய்து வரும் சவர்மா கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தாராபுரம் பகுதியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...