தாராபுரம் அமராவதி ஆற்றில் முதல் கட்டமாக 40 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதற்கட்டமாக 40 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை முன்னிட்டு தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் நகரம் முழுவதும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதற்கட்டமாக 40 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் விஜர்சன ஊர்வலம் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சி அமைப்பு சார்பில் நடந்தது.



இந்து மக்கள் கட்சியினர் தாராபுரம் நகர வீராட்சிமங்கலம், தளவாய்பட்டிணம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்திய 29 விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர், தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை ரவுண்டானா பகுதியில் அணிவகுத்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து மதியம் 1 மணி அளவில் இமக மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சஷ்டி சேனா இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி பேரணியை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி சாலை வழியாக வழியாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அமராவதி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு சிலைகளாக பெற்று தீயணைப்பு துறையினர் கரைத்து விஜர்சனம் செய்தனர். இதேபோல, தாராபுரம் நகர ஒன்றிய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில்11 சிலைகளையும் தாராபுரம் உடுமலை சாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



இதையடுத்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரசாமி தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அமராவதி ஆற்றுங்கரையை அடைந்தனர்.



இதையடுத்து, 11 சிலைகளுக்கும் அங்கு சிறப்பு பூஜை செய்து போலீசார் முன்னிலையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், தலைமையில் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகளை வீரர்கள் மாலை 4 :30 மணி அளவில் கரைத்தனர். இதனை முன்னிட்டு தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உட்பட நகரம் முழுவதும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...