உடுமலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைப்பு

உடுமலை அருகே குடிமங்கலம் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதைமுன்னிட்டு டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று பெதப்பம்பட்டியில் துவங்கி உடுமலை நகரில் முக்கிய வீதிகளான பொள்ளாச்சி சாலை மற்றும் தளிரோடு குட்டை திடல் பழைய பஸ் நிலையம் வழியாக சென்று அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.



விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...