டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - யானைகளுக்கு சிறப்பு பூஜை

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி முகாமில், 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா முன்னிலை வகித்தனர். உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் வரிசையாக யானைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், விநாயகப்பெருமானுக்கும், யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

Newsletter

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...