கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் நேரடி ஆய்வு மேற்கொண்டு வெங்காய விநியோகத்தை கண்காணித்து அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கினார்.
Coimbatore: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு வெங்காய விற்பனை செய்யும் திட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உள்ள 661 நியாய விலைக்கடைகளில் வெங்காய விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த விற்பனை நடைபெறுகிறது. ஒரு அட்டைக்கு ஒரு கிலோ வீதம் வெங்காயம் வழங்கப்படுகிறது. காலை முதலே பொதுமக்கள் கடைகளுக்கு வந்து 35 ரூபாய் செலுத்தி வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்தின் நடைமுறை குறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அவர் மசக்காளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு நேரடியாக வெங்காயம் வழங்கி இந்த திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கினார். வெங்காய விநியோகம் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்தார்.
மேலும், கடையில் பணியாற்றும் அலுவலர்களிடம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார். வெங்காய விற்பனை விவரங்கள், அதனை வாங்குபவர்களின் விவரங்கள் ஆகியவற்றை தினசரி குறிப்பேட்டில் முறையாக பதிவு செய்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். இதன்மூலம் வெளிப்படைத்தன்மையுடன் விநியோகம் நடைபெறுவதை உறுதிசெய்ய முடியும் என்று தெரிவித்தார்.
இத்திட்டம் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. சந்தையில் வெங்காய விலை கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை இருக்கும் நிலையில், ரேஷன் கடைகளில் 35 ரூபாய்க்கு கிடைப்பது மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.