ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. சிறந்த ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி K.S.சதீஷ், IFS சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


Coimbatore: கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி Dr. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தின விழா செப்டம்பர் 3, 2026 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.



விழாவிற்கு SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி C.V.ராம்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr. P.L.சிவக்குமார், ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.



விழாவில், கோயம்புத்தூர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி K.S.சதீஷ், IFS சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது, "உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆசிரியர் நிச்சயம் இருப்பார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் எப்போதும் சரியான திசையை மட்டுமே காண்பித்து, வழிநடத்தக் கூடியவர்கள். இந்த நன்னாளில் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.



தொடர்ந்து, 2025-2026 ஆம் கல்வியாண்டில் கற்பித்தல், ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுதல் மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கி, முதல் மூன்று இடங்களைப் பிடித்த பேராசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



அதன்படி, முதலிடம் பிடித்த BSc CS துறை உதவிப்பேராசிரியர் Dr. V.கவிதா, இரண்டாமிடம் பிடித்த BSc CSDA துறை உதவிப்பேராசிரியர் Dr. M.பிரனீஷ், மூன்றாமிடம் பிடித்த MBA துறை உதவிப்பேராசிரியர் Dr. T.திவ்யா ஆகியோருக்குச் சிறப்பு விருந்தினர் கரங்களால் சிறந்த ஆசிரியருக்கான கேடயம் வழங்கப்பட்டது. மேலும், ரொக்கப்பரிசாக முறையே ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.



அதேப்போன்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த துறைகளுக்கும் விருது வழங்கப்பட்டது. அதன்படி, முதல் இடத்தை BSc CSDA துறையும், இரண்டாம் இடத்தை தகவல் தொழில்நுட்பவியல் துறையும், மூன்றாம் இடத்தை உயிரி தொழில்நுட்பவியல் துறையும் பிடித்திருந்தது. இத்துறைகளுக்குத் தலா ரூ.25,000, ரூ.20,000, ரூ.15,000 என்ற அளவில் ரொக்கப்பரிசும் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மேலும், பேராசிரியர்களுள் தரவரிசையில் 4 முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, BSc CS துறை இணைப் பேராசிரியர் Dr. M.ஹேமலதா, BCom PA துறைத் தலைவர் Dr. T.சந்தானகிருஷ்ணன், BCA துறை இணைப் பேராசிரியர் Dr. S.தவமணி, BCom IT துறைத்தலைவர் Dr. T.சசிகலா தேவி, BSc CS துறை உதவிப் பேராசிரியர் Dr. M.ஜெய்தூன் பிபி, BCA துறைத்தலைவர் Dr. T.ஹரி பிரசாத், BSc CT துறைத்தலைவர் Dr. V.சுமதி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் முன்னதாக கல்லூரியின் அகமதிப்பீட்டுத் தர நிர்ணய மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் Dr. I.பர்வின் பானு வரவேற்றுப் பேசினார். நிறைவாக, ஆசிரியர் மன்றத்தின் தலைவர் Dr. T.ஹரிபிரசாத் நன்றி கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...