உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிக்கு உட்பட்ட 94068 ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் இன்று முதல் 11.10.23 முடிய 21 நாட்களுக்கு பிரதான கால்வாயில் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.



திருப்பூர்: 21 நாட்களுக்கு 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கபடும் என்றும் நீர்இருப்பு, நீர்வரத்தை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடபடும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிக்கு உட்பட்ட 94068 ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் இன்று முதல் 11.10.23 முடிய 21 நாட்களுக்கு பிரதான கால்வாயில் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.

21 நாட்களுக்கு 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கபடும். மேலும், நீர்இருப்பு, நீர்வரத்தை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கலந்து கொண்டனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசணை கூட்டத்தில், தென்மேற்கு-வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தால் வழக்கமாக பாசனத்திற்கு 4 நான்கு சுற்றுகள் வழங்கும் நிலையில், தற்போது ஒரு சுற்று தண்ணீர் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் குழு அமைக்கபட்டு, விவசாயிகள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...