துடியலூரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு - 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்

கோவை துடியலூரில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக வெட்ட குளத்தில் போட்டு கரைக்கப்பட்டன.



கோவை: 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் செயற்கையாக வெட்டப்பட்ட குளத்தில் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் சுற்றுப்பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயற்கையாக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் விட்டும் 2 போர்வெல் மூலம் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் விட்டும் சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் காவல் துணை ஆணையர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவையோட்டி கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



அதனை தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.



இதில் இந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பி.ஜே.பி கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார். விசர்சன ஊர்வலத்தை பி.ஜே.பி கட்சி மாவட்ட துணை தலைவர் செந்தூர் முருகேசன் தொடங்கி வைத்தார்.



கேரளா செண்டைமேளம், டோல் மற்றும் ஜமாப்புடன் ஊர்வலமாக வந்து சிலைகளை கரைத்தனர்.



அதில் இந்து முன்னணி சார்பாக 265 விநாயகர் சிலைகளும், இந்துமக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பர்சத், அனுமன் சேனா, பாரத் சேனா, ஹிந்து பாரத் சேனா, அகிலபாரத இந்து மகா மற்றும் பொதுமக்கள் சிலைகள் என 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் வெள்ளக்கிணர் குட்டையில் நீர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி சார்பில் செயற்காக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டும், 2 போர்வெல் மூலம் ஒரு வாரம் நேரடியாக தண்ணீர் விட்டும்.



சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் சிலைகள் கரைக்கபட்டன.



கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி சார்பாக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விநாயகர் கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...