துடியலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - விதி மீறியதாக பாஜக வினர் மீது வழக்கு பதிவு

துடியலூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், அனுமதி இன்றி ஒலி பெருக்கி கட்டி இடையூறு கொடுத்ததுடன், காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாக உதவி ஆய்வாளர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த சஜூ, கிருஷ்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தா, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் வத்சலா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவையிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று கோவையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகளை அப்பகுதி மக்கள், மற்றும் இந்து அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் கரைத்தனர்.

அதே சமயம் ஊர்வலத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி உரிய அனுமதி பெற்றே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது பாஜகவினர் பட்டாசு வெடித்தும், அனுமதி இன்றி ஒலி பெருக்கி கட்டி இடையூறு கொடுத்ததுடன், காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாக உதவி ஆய்வாளர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த சஜூ, கிருஷ்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தா, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் வத்சலா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...