கோவை சிறையில் சிறை காவலர்களுக்கும் கைதிளுக்கும் மோதல் - 4 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: சிறைக்காவலர்களுக்கும்-கைதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மோதலில் ஈடுபட்ட 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சுமார் 600 கைதிகள் உள்ளனர். அவர்களை கண்காணிக்க வார்டர்கள், சிறை காவலர்கள் உள்ளனர். இந்நிலையில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் தினேஷ்(எ) மண்டை தினேஷ், அய்யனார், அழகர்சாமி, ஹரிஹரன், கிஷோர்குமார், உதயகுமார், அரவிந்த் என்ற 7 கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே ஏதோ காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது.



இதில் ராகுல், மோகன்ராஜ், பாபுஜான், விமல்ராஜ் ஆகிய 4 சிறை காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அந்த 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இதர சிறை காவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகள் 20-25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...