கோவையில் ஊருக்குள் உலா வந்த 3 காட்டு யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இன்று காலை ஆறு மணியளவில் ஊருக்குள் உலா வந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: வனப்பகுதியில் இருந்து உணவுத்தேடி வரும் காட்டு யானைகளை, ஊருக்குள் புகாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு வருவது வாடிக்கையாகி வருகிறது. அதேபோல் இன்று காலை 6 மணியளவில் ஒரு குட்டியுடன் 2 காட்டு யானைகள் உணவு தேடி பன்னிமடையை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் குடியிறுப்புகள் நிறைந்த பகுதிக்குள் உலா வந்தன.



இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது. அதே நேரம் காட்டு யானைகள் ஊருக்குள் புகா வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...