கோவையில் மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை வஉசி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 6 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் 10 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை வஉசி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30% அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், போர்வைகள், தலையணை உறைகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ரகங்கள் என ஏராளமான வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 6 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் 10 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...