அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது, அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை தான் பேசுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.



கோவை: அதிமுகவில் உள்ள சில தலைவர்களுடன் அண்ணாமலைக்கு பிரச்சனை இருக்கலாம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு இச்சட்டம் நிறைவேறியுள்ளது. சென்செக்ஸ் முடிந்ததும் அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும். பாஜக கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது.

இதை பெண்கள் உரிமையாக பாஜக பார்க்கிறது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். ஏக மனதாக அனைத்து கட்சிகளும் இதனை வரவேற்றுள்ளனர்.

இரண்டு முறை இதற்கு முன்பு நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீட் உயர்த்தியுள்ளோம். இதில் ஸ்டாலின் சொல்வது போல எந்த சதியும் இல்லை. சதி என்ற வார்த்தையை முதல்வர் எப்படி பயன்படுத்தலாம்?. அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சனை இல்லை. பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பிரச்சனை இல்லை.

அதிமுகவில் உள்ள சில தலைவர்களுடன் அண்ணாமலைக்கு பிரச்சனை இருக்கலாம்.மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள் கூட்டணியில் உள்ளனர். செல்லூர் ராஜூ சொல்வது போல் மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி என நான் எப்படி அறிவிக்க முடியும்?. எனது தன்மானத்தை கேள்விக் குறியாக்கினால் பேசுவேன். அது எனது உரிமை. தன்மானத்தை விட்டு தந்து அரசியல் செய்ய மாட்டேன். எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை.

அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது.. கூட்டணியில் உள்ள கட்சிகள் வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள். தமிழகத்தில் மது ஒழிப்பதற்கு இலக்கணம் அண்ணா, குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரைகுறைவாக நான் விமர்சிக்கவில்லை. எந்த கட்சிக்கும் இந்த கட்சி போட்டியில்லை, பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே இலக்கு. என் கட்சியை நான் வளர்க்கிறேன். திமுக விஷம். திமுகவை அடியோடு வெறுக்கிறேன். பேச்சிற்கு பேச்சு நான் பேச விரும்பவில்லை.

அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது, அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை தான் பேசுகிறேன். மோடியை ஏற்றால் கூட்டணி இருக்கும். சனாதனம் எங்கள் உயிர் நாடி. சனாதனம் வாழ்க்கை கோட்பாடு என்றும் சனாதன தர்மம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவார்.

இந்தியா கூட்டணியில் 5 மாநிலங்களில் கூட்டணி இல்லை. அக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் எனத் தெரியாது. மேலும் நான் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். நான் இப்படியே தான் இருப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...