எந்த மலை தடுத்தாலும் 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் நம்மவரே! - கோவையில் போஸ்டர் ஒட்டிய மக்கள் நீதி மய்யத்தினர்

யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமயமலையாய் உம்மை தூக்கி பிடிக்கும். கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..! என கோவையில் மக்கள் நீதி மன்ற நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.



கோவை: தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதிமன்றத் தலைவருமான கமல்ஹாசன் இன்று கலந்துகொள்கிறார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று கோவை வருகிறார்.

கோவையில் நட்சத்திர ஹோட்டலில் மண்டல நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தயுள்ளார். அதனை தொடர்ந்து தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.



இந்நிலையில் கமல்ஹாசனை வரவேற்கும் விதமாக கோவை தெற்கு வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரயில்நிலையம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், "யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமயமலையாய் உம்மை தூக்கி பிடிக்கும் கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...